நாட்டில் வருடாந்தம் 1600 பேர் நீரில் முழ்கி மரணம்
இலங்கையில் நீரில் மூழ்கி வருடாந்தம் 1600 பேர்வரை உயிரிழப்பதாக இலங்கை உயிர்காப்பு ஆலோசனை சங்கம் தெரிவித்துள்ளது. நீரிழ் மூழ்கி உயிரிழப்பவர்களைவிட நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றச் செல்லும் நபர்களே அனேகம் உயிரிழப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் டபிள்யு.எஸ்.பந்துல தெரிவித்தார்.
"பாதுகாப்பற்ற உயிரை வெற்றிகொள்வோம்" என்ற தொனிப்பொருளில் இபிபன்கடுவ நீர்தேக்கத்தில் இலங்கை உயிர்காப்பு ஆலோசனை சங்கம் நடத்திய விசேட பயிற்சி நடவடிக்கையின் பின்னரே பந்துல இவ்வாறு கூறினார்.
அடுத்த வருடம் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பொது மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment