முழு A/L பரீட்சை முடிவுகளையும் தடைசெய்யுங்கள் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை
மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாதென கூறியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், முழு பரீட்சை பெறுபேறுகளையும் தடை செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட குழப்பத்தை சுட்டிக்காட்டி முழு பெறுபேறுகளையும் தடை செய்யுமாறு ஜனாதிபதி, அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு கடிதங்களை அனுப்பி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
முழு பரீட்சை பெறுபேறுகளையும் தடை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகம் செல்ல மாவட்ட நிலை அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொறுப்பற்ற கருத்தை தெரிவித்துள்ளதாகவும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாக ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

Post a Comment