மீண்டும் ரணில் - சிலர் கல்லெறிந்து தாக்குதல்
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தீர்க்கமான தேர்தல்கள் இன்று திங்கட்கிழமை கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றன.
அதுகுறித்து வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் 72 வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்
கரு ஜயசூரிய பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 24 என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதேவேளை, 44 வாக்குகளை பெற்ற ரவி கருணாநாயக்கவை தோற்கடித்து, 52 வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அமைப்பாளருக்கான தேர்தலில் 40 வாக்குகளை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பின் தள்ளி கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் தயாகமகே 56 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்கட்சி தலைமையகத்திற்கு தாக்குதல் சிலர் கல்லெறிந்து நடத்தி குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ள

Post a Comment