குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 64 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர
குவைட்டில் பணிப்புரிந்த இலங்கை பணிப்பெண்களில் சிலர் இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். குவைட் வானூர்தி சேவைக்கு சொந்தமான கே யூ 361 என்ற வானூர் மூலம் இவர்கள் இன்று அதிகாலை 5.40 அளவில் இலங்கை வந்தடைந்தனர்.
பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான 64 பணிபெண்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், நாடு திரும்பியுள்ள இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment