பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்தரப்பு மீது தாக்குதல்
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆளும் கட்சி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடந்த கைலப்பு சண்டை தெருச்சண்டை போல காட்சியளித்துள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மீது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீது இன்று பாராளுமன்றில் விவாதம் இடம்பெற்று வருகிறது. பாதுகாப்பு அமைச்சின் ஒழுங்கீனங்கள் பற்றியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் சர்வாதிகாரப்போக்கு தொடர்பாகவும் அவ்விவாதத்தில் உரையாற்றிய பாலித ரங்கே பண்டார விபரித்தார்.
இதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோதபாய, மற்றும் மகிந்த ராசபக்ச ஆகியோருக்கு தமது விசுவாசத்தை காட்டுவதற்காக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாய்ந்து சென்று அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து ஐதேக உறுப்பினர்கள் பாராளுமன்ற சபை அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அனுதிக பெர்னாண்டோ முதலில் பாய்ந்து சென்று ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல் நடத்தினார் என தெரிவிக்கப்படுகிறது
Post a Comment