பரீட்சை முடிவுகளில் குழப்பம் - மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிய அரசாங்கம்
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான குளறுபடிகள் காரணமாக உயர்கல்வி அமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டுமென கொழும்பு மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று கூறினார்.
'சிறந்த கொள்கைகளினால் ஆளப்படும் ஒரு நாட்டில், இதற்குப் பொறுப்பான அமைச்சர் உடனடியாக இராஜினாமா செய்திருப்பார். க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது எந்தவொரு பிள்ளையின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையாகும். அவர்களின் எதிர்காலம் இதில் தங்கியுள்ளது. ஆனால் அதிகாரிகள் இதனுடன் விளையாடுகின்றனர்' என சுஜீவ சேனசிங்க எம்.பி. கூறினார்.

'இப்பரீட்சை பெறுபேறு வெளியீட்டில் ஏற்பட்ட தவறு இவ்வதிகாரிகளால் அண்மையில் ஏற்பட்ட முதலாவது தவறு அல்ல. எண்ணற்ற தடவைகள் இத்திணைக்களம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. வினாப்பத்திரங்களில் தவறான வினாக்கள், கொள்கைகளை அமுல்படுத்தாமை, காலத்திற்கு ஒவ்வாத கொள்கைகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் நேரடி பொறுப்பாகும்' என அவர் கூறினர்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் செயற்பாட்டை அரசாங்கம் தொடர்ந்தும்மேற்கொள்வது கேலிக்கிடமானது. எனவும் அவர்கூறினார். இவ்வாறான நடவடிக்கைகளால் இளைஞர்கள் விரக்திக்குள்ளாகலாம் எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. தெரிவித்தார்

Post a Comment