யாழ்ப்பாணத்தில் பெரஹரா
யாழ்ப்பாணத்தில் பௌத்த விகாரைகளை அமைத்து வரும் அரசாங்கம் பெருந்தொகையான சிங்களவர்களை தென்னிலங்கையிலிருந்து அழைத்து வந்து யாழ் நகரில் பெரெஹரா கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமைமாலை 6 மணிக்கு ஆரம்பமான பேரேஹரா நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வரையில் யாழ்.நகரை சுற்றி வலம் வந்தது
யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பௌத்த தமிழ் சங்கம் என்னும் அமைப்பும் யாழ்.மாவட்ட இராணுவத்தினரும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதில் பாடசாலை மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்ததாக மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக இவ்வாறாதொரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.இவ் பேரேஹரா நிகழ்விற்காக தென்பகுதியிலிருந்து யானையும் கொண்டு வரப்பட்டு உலர்திகளும் இராணுவத்தினரது நிகழ்வுகளும் உலர்வலத்தில் இடம்பெற்றிருந்தது. இவை தவிர இப் பேரேஹரா நிகழ்வு காரணமாக யாழ்.நகரில் பலாலி வீதி ஆஸ்பத்திரி வீதி பருத்தித்துறை வீதி உள்ளிட்ட நகரினுள்ளே பிரவேசிக்கும் வீதிகள் யாவும் போக்குவரத்திற்காக முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்து.

Post a Comment