Header Ads



ஊடகங்களுக்கான ஒழுக்கக் கோவை வெளியிடுகிறது இலங்கை அரசாங்கம்


ஊடகங்களுக்கான ஒழுக்கக் கோவையும் வழிகாட்டல் செயற்பாடும் விரைவில் வர்த்த மானியில் வெளியிடப்படவுள்ளது. இலங்கையில் உள்ள சகல அரசாங்க, தனியார் துறை பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் ஆகியவற்றுக்கான தர்மத்திற்கு ஏற்புடைய வகையிலான ஒழுக்கக் கோவை தயாரிக்கப்படுகிறது. 

இதேவேளை, ஊடகங்களுக்கான வழிகாட்டல் வழங்கும் சட்டப் பிரமாணங்களையும் அரசாங்கம் இப்போது ஒளிபரப்பு, அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் சட்ட வரைஞரின் ஊடாக தயாரித்து வருகின்றதென்று ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல தெரிவித்தார். இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், 

இலங்கையில் ஊடகங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அல்லது காண்காணிக்கும் அதிகாரம் தமது அமைச்சுக்கு இருக்கிறது என்றும், இதுவரையில் அரசாங்க ஊடகங்களைத்தவிர தனியார் ஊடகங்கள், குறிப்பாக தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் தங்களை இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த புதிய சட்டப்பிரமாணம் தயாரிக்கப்பட்டவுடன் இலங்கையில் உள்ள சகல அரச, தனியார் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளை அழைத்து அதுபற்றி கலந்துரையாடல்கள் நடத்தப்படுமென்றும், அப்போது சகல ஊடகங்களின் கருத்துக்கள் கேட்டறியப்படுமென்றும் அந்த ஊடகங்களின் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் நியாயபூர்வமாக இருந்தால் அவற்றுக்கு ஏற்புடைய வகையில் திருத் தங்கள் கொண்டுவரப்படும்.

அதன் பின்னர் அந்த சட்டப்பிரமாணங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படு மென்றும் கூறினார். இந்த புதிய சட்டப் பிரமாணங்கள் மூலம் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் ஊடகங்கள் செயற் படுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுமென்றும் கணேகல மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.