மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் நியமனம்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த திரு.என்.வேதநாயகன் திடீர் என இன்று புதன்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த ஏ.பத்திநாதன் மொணராகளை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக இலஞ்ச ஊழல் ஒழிப்புத்தினணக்களத்தில் கடமையாற்றிய சரத் ரவீந்திரா என்ற சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment