லிபியாவின் முன்னாள் பிரதமர் டுனிசியாவிலிருந்து நாடு கடத்தப்படுகிறார்
லிபியாவின் முன்னாள் பிரதமர் அல் பக்தாடி அல் மஹ்மூதை மீண்டும் லிபியாவுக்கு நாடுகடத்துவதற்கு ரியுனிசிய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. லிபியாவின் புதிய அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம், ரியுனிசியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
எனினும் தாம் நாடு கடத்தப்பட்டால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என லிபியாவின் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ரியுனிசிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது, அரசியல் மயப்படுத்தப்பட்ட நியாயமற்ற விடயம் என அவரது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மறைந்த முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் ஆட்சியில், இவர் பிரதமராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment