ஒஸாமா பின்லேடனை காட்டிக்கொடுத்தது ஜவாஹரியா..?
ஒசாமா பின் லேடனைக் காட்டிக் கொடுத்தவர் அந்த அமைப்பின் துணைத் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரிதான் என முன்னாள் அமெரிக்க கடற்படை கமாண்டோ சுக் ஃபாரர் தெரிவித்துள்ளார்.ஒசாமா பின் லேடன் கடந்த மே 2-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் இருந்த வீட்டில் அமெரிக்க கமாண்டோக்களால் கொல்லப்பட்டார்.ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பதுங்கியிருந்த இவரது மறைவிடத்தைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தது ஜவாஹிரி அனுப்பிய கூரியர் தபால்கள்தான் என்று முன்னாள் அமெரிக்க கடற்படை கமாண்டோ சுக் ஃபாரர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின் லேடனைக் கொலை செய்வதற்கு வீட்டிற்குள் நுழைந்த 6 கமாண்டோக்களில் ஃபாரரும் ஒருவர். இவர் எழுதிய புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது புத்தகத்தில் சுக் ஃபாரர் எழுதியிருப்பது, பின் லேடனை ரஷியர்கள் கொன்று விடுவார்கள் என்று ஜவாஹிரி எதிர்பார்த்தார் ஆனால் அது நடக்கவில்லை. அவருக்கு இருந்த அடிசன்ஸ் நோய் காரணமாக பின் லேடன் இறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. கடைசியாக கூரியர் தபால்களை அதிகம் அனுப்பி சிஐஏ கவனத்தை ஈர்த்து அதன் மூலம் பின் லேடனுக்கு முடிவு கட்டி, தலைமைப் பதவியைப் பிடித்துள்ளார் ஜவாஹிரி என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
60 வயதான ஃபாரர் எழுதிய 225 பக்க புத்தகத்தில் ஒசாமா பின் லேடன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Post a Comment