Header Ads



பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் கட்டணம் உயர்வு - இலங்கை மாணவர் பாதிப்பு

பிரிட்டனில் மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் பல்கலைக்கழகங்கள் தம் கல்விக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. உயர் கல்விக்கான கல்விக் கட்டணத்தை திட்டமிடலில் கால தாமதம் ஆகிவிட்டதாக பல்கலைக்கழகங்கள் தெரிவத்துள்ளன. அமைச்சர்கள் இந்த கல்விக்கட்டண உயர்வு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களை எந்தவகையிலும் பாதிக்க கூடாது என்று பல்கலைக்கழகங்களைக் கேட்டு கொண்டனர். கல்விக்கட்டணம் அதிக பட்சமாக 9000 பவுண் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசு கட்டண உயர்வு விபரங்கள், மாணவர் உதவித்தொகை, கட்டணம் இல்லாதவர்கள் பற்றிய தகவல்களை பல்கலைக்கழகங்களிடம் கோரியிருந்தது. இதன் அப்போதிருந்த ஒஃபா என்ற கட்டண ஒழுங்காற்று அதிகாரி இதனை சரிபார்த்தார்.  ஆனால் அரசு தனது உயர்கல்வி மானியத்தில் மாற்றங்களைப் புகுத்திவிட்டது. இந்த மாற்றங்களோடு கூடிய புதிய அறிக்கை பல்கலைக்கழகங்கள் குறைந்த பட்சம் 7500 பவுண்ட் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்று தெரிவித்துள்ளது. இதன்பிறகு இந்தக் கட்டண உயர்வை பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

நிக்கோலா டான்டிரிட்ஜ் எனபவர் பிரிட்டனில் பல்கலைக்கழக குழுமத்தின் தற்போதய தலைவராவார். இவர் கொள்கை மாற்றங்கள் பற்றிய அரசின் அறிவிப்பு காலாதாமதமாக வெளிவந்ததைக் கண்டித்துள்ளார், மாணவர் எண்ணிக்கையை அரசு முதலில் வரையறுக்கவில்லை.  2012-13 வருடத்திற்கான கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழகங்கள் அரசுக்கு ஏப்ரல் மாத்தில் தெரிவித்து விட்டன. ஆனால் ஜுன் மாத்தில் தான் அரசு மாணவ எண்ணிக்கைகளைத் தீர்மானித்தது. இதன் பின்பு பல்கலைக்கழகங்கள் கல்விக்கட்டணத்தை உயர்த்தின

இப்போது சில பல்கலைக்கழகங்கள் தங்களிடம் படிக்கவிரும்பும் மாணவர்களை இழக்கவிரும்பாமல் அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக கட்டணத்தைக் குறைக்கவேண்டியுள்ளது. இதுவரை விண்ணப்பித்தவர்களுக்கும் இனி விண்ணப்பிக்கின்றவர்களுக்கும் பல்கலைக்கழகங்களின் புதிய கட்டணம் குறித்த தகவலை முறையாக அறிவிக்கும் என்றார் நிக்கோலா டான்ரிட்ஜ். இதேவேளை இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் சென்றுள்ள மாணவர்கள் குறித்த கட்டண அதிகரிப்பால் பாதிப்பை ஏதிர்கொள்வரெனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.