'அண்ணா ஹசாரே ஒரு டியூப்லைட்' என கடும் விமர்சனம்
அண்ணா ஹசாரே குழுவினரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் திக்விஜய் சிங் இப்போது அக்குழுவினரை டியூப்லைட்டுகள் என வர்ணித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து வெளியிட்டுள்ள திக்விஜய் சிங், 'லோக்பாலுக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் திட்டத்துக்கு நிலைக்குழுவில் அண்ணா ஹசாரே குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர், சரியான டியூப்லைட்டுகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவிஷயத்தை புரிந்துகொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவர்களை டியூப்லைட் என பொதுவாக கேலி செய்யப்படுவதுண்டு. அதுபோன்று ஹசாரே குழுவினரை திக்விஜய் கேலி செய்துள்ளார்.அடுத்ததாக மெளனவிரதத்தை ஹசாரே முடித்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் திக்விஜய் குறிப்பிட்டுள்ளார்.
திக்விஜயின் கேலிக்கு அண்ணா ஹசாரே குழுவில் உள்ள கிரண்பேடி உடனடியாக பதிலடி கொடுத்தார். திக்விஜயின் பாஷை அப்படித்தான் இருக்கும். நாம் அவரிடம் போட்டியிட முடியாது என கிரண்பேடி ஏளனம் செய்தார்.

Post a Comment