Header Ads



எகிப்தில் மீண்டும் புரட்சி வெடிக்கலாம் - இஹ்வானுல் முஸ்லிம் எச்சரிக்கை

கடந்த காலங்களில் மேற்கு நாடுகள் அறபுலகின் சர்வாதிகார ஆட்சி பீடங்களுக்கே ஆதரவளித்து வந்தன. எகிப்திய மக்கள் ஜனநாயக மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். இதனால் மேற்கு நாடுகள் தமது கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பிரதித் தலைவர் பொறியியலாளர் கைரத் ஷாதிர் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கோ, புரட்சியைக் களவாடுவதற்கோ யாராவது முயன்றால் எகிப்திய மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் அச்சுறுத்துகின்ற மொழியில் பேசுவதில்லை. அதிகாரத்தைக் கையளிப்பதாக இராணுவம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அவர்கள் அதைச் செய்தால் முழு நாடும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும். செய்யாவிட்டால் மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். மீண்டும் மக்கள் புரட்சி வருவதன் சாத்தியம் பற்றி குறிப்பிடுகையில், "தேவை உருவானால், மக்கள் புரட்சி வீதிகளில் மீண்டும் மீண்டும் வெடிக்கும்."

இஹ்வான்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உள்ள உறவு பற்றிக் குறிப்பிடுகையில், "இதுவரை குறைந்தபட்சம் 200 தூதுக் குழுவினர் எம்மைச் சந்தித்துள்ளனர். இதில் தூதுவராலயங்கள், அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், ஆய்வு மையங்கள், பத்திரிகையாளர்கள் என்று பல நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கியிருந்தனர். அவர்கள் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் பற்றி மேலும் அறிவதற்காக வருகை தருகிறார்கள். அத்தோடு எகிப்திய அரசியல் அரங்கில் எமக்குள்ள செல்வாக்கு பற்றி மேலும் அறிவது அவர்களது நோக்கமாக இருக்கிறது."

No comments

Powered by Blogger.