Header Ads



பிரிட்டனில் பாரிய விபத்து

பிரித்தானியாவில் இடம்பெற்ற M5 நெடுஞ்சாலை விபத்தொன்றில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் இடம்பெற்றுள்ள மோசமான விபத்துக்களில் இதுவும் ஒன்று என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசமான விபத்துக் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்று இரவிலிருந்து மீட்பு நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும். உயிரிழப்புக்கள் தொடர்ந்து உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை, பனி போன்ற சீரற்ற காலநிலை காரணமாகவே மேற்படி விபத்து ஏற்பட்டதாகவும் குறித்த விபத்தில் 34 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த உடனே குறித்த பிரதேசம் போர் மண்டலமாக காட்சியளித்தது. பயங்கரமாக மோதியதில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அதனுள் இருந்த மக்கள் அலறியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மோசமான காலநிலை இருந்தாலும் கூட தீ அணைப்புப் படை வீரர்களும் பொலிஸாரும் வேகமாக மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.