Header Ads



கொலம்பியா பார்க் கிளர்ச்சிக்குழு தலைவர் சுட்டுக்கொலை


கொலம்பியாவின் பார்க் கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அல்பன்சோ கானோ கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கானோ கொல்லப்பட்டதாக, ஜனாதிபதி ஜூவான் மானுவெல் சன்டோஸ் தெரிவித்துள்ளார்.

தசாப்த காலமாக நீடித்து வரும் ஆயுத போராட்டத்தில் பார்க் இடதுசாரி குழு அடைந்த மிகப் பெரிய தோல்வியாக கனோவின் மரணம் கருதப்படுகின்றது. கொலம்பியாவின் தென் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது கானோ கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜுவான் கார்லோஸ் பின்சோன் தெரிவித்துள்ளார்.

பார்க் அமைப்பின் பல முக்கிய கமாண்டோக்களை கொலம்பிய இராணுவத்தினர் அண்மைக்காலமாக கொலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 63 வயதான கானோவின், இருப்பிடத்தை தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்டதன் மூலம் அறிந்து கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனோவின் தலைக்கு நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. எஞ்சியுள்ள போராளிகளின் ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு ஜனாதிபதி ஜூனோ கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.