நைஜீரியாவில் கலவரம் 60 பேர் மரணம், 100 பேர் காயம்
நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இரு நகரங்களில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையேயான பிரச்சனை தொடர்பாக நேற்று நள்ளிரவு கடும் கலவரம் மூண்டது.
டமாடரு என்ற நகரத்திலுள்ள பல்வேறு சர்ச்சுகள் மற்றும் 4 காவல் நிலையங்கள் ஆகியவற்றின் மீது அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
மேலும் மைடுகுரி என்ற நகரத்திலுள்ள ராணுவ முகாம் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதலும் தொடுக்கப்பட்டது. இந்த கடுமையான தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இந்த தாக்குதலுக்கு போகோ ஹரம் என்ற இஸ்லாமிய அமைப்பு பின்புலமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Post a Comment