ஓ.எல். பரீட்சையில் அதிரடி மாற்றங்கள் - கல்வியமைச்சர் அறிவிப்பு
கல்வி அமைச்சால் நடத்தப்படும் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் 2013 ஆம் ஆண்டு முதல் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இனிவரும் காலங்களில் உயர்தரக் கல்வி பயில்வதற்கான பாடங்களை ஆண்டு 9 முதல் ஒரு மாணவன் தெரிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய முறைமை உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு முதல் பாடசாலைக் கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள பெரும் கொள்கை மாற்றத்துக்கு அமைவாக அடுத்த ஆண்டு முதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். இந்தப் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு தற்போது முழு வீச்சில் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனது இறுதி அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் 2013 ஆம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவன் 6 கட்டாய பாடங்களையும்,தாம் உயர்தரத்தில் கற்கவுள்ள பாடத்தெரிவுக்காக 3 துணைப் பாடங்களையும் எழுதவேண்டியவர்களாக இருப்பார்கள் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். கட்டாய பாடங்களுள் தமிழ்,கணிதம், சமூகக்கல்வி, சமயம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
இந்தப் பாடங்களுக்கு மேலதிகமாக மூன்று துணைப் பாடங்களை உயர்தரத்தில் தாம் கற்கவுள்ள பாடநெறியுடன் இணைந்ததாக மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ,உயர்தரத்தில் வர்த்தகப் பாடநெறியை கற்கநோக்கமுள்ள ஒரு மாணவன், கணக்கியல், பொருளியல் மற்றும் வர்த்தக கற்கை என்பவற்றை தெரிவு செய்யவேண்டும். இதன் மூலம் ஒரு மாணவன் உயர்தரத்திற்குள் நுழையும் போது தான் கற்க வேண்டிய பாடம் குறித்த அடிப்படை அறிவைக் கொண்டிருப்பான்.
இன்று நிலைமை அப்படியல்ல சாதாரணதரப் பரீட்சை எழுதிய பின்னரே மாணவர்கள் உயர்தரம் குறித்து சிந்திக்கிறார்கள் உயர்தரத்தில் நுழையும் போது தாம் கற்கும் நெறிகுறித்து எந்த அடிப்படை அறிவும் அவர்களுக்கு இருப்பதில்லை இது பல மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது என்றார் கல்வி அமைச்சர். இதே போன்று அறிவியல் பாடத்தைக் கற்க விரும்பும் மாணவர்கள் ஆண்டு 9 முதலே தமக்கான பாடம் குறித்த அடிப்படை அறிவைக் கற்பதற்கு ஏதுவாக இருக்கும்.

Post a Comment