Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது - அஸ்வர் எம்.பி. அழுகிறார்

தமிழ்க் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் ஒரு தேசத்துரோகம். பிறந்த நாட்டுக்கு இழைக்கும் துரோகம். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறையில்லை. இந்தியாவில் எவரும் வெளிநாடுகளுக்குச் சென்று உள்நாட்டுப் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ. எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.புலம்பெயர் சக்திகளுடன் இணைந்து போராட்டம் என்ற போர்வையில் நமது நாடே சிதைந்தது. மக்களின் நிம்மதி தொலைந்தது. தமிழ் இளைஞர்கள் அழிந்தனர்.

கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்தன. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும். தமிழ் கூட்டமைப்பு கிழக்கு மாகாண கூட்டமைப்பு எம்.பிக்களைப் புறக்கணித்தே அமெரிக்கா சென்றுள்ளமை அந்த மக்களை புறக்கணிக்கும் செயலாகும்.

No comments

Powered by Blogger.