Header Ads



இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசயம்..!

இந்தியா - வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோட்டை(59), விவசாயி. இவரது ஜெர்சி வகை பசுமாடு 15 மாதங்களுக்கு முன்பு பசுங்கன்று ஈன்றது. கொழு கொழுவென்று வளர்ந்த அந்த கன்றுவின் மடியில் இருந்து கடந்த மாதம் திடீரென பால் சுரந்தது. அதை பார்த்து ஆச்சரியம் அடைந்த ராஜகோட்டை, செம்பை எடுத்து பால் கறக்க தொடங்கினார். காலை ஒரு லிட்டரும், மாலை ஒரு லிட்டரும் என தினமும் 2 லிட்டர் பால் கொடுக்கிறது.

தகவல் அறிந்த பொதுமக்கள் தினமும் அந்த அதிசய கன்றுவை பார்த்துச் செல்கிறார்கள். பொதுவாக பசுங்கன்று பிறந்து 3வது ஆண்டுக்கு பிறகுதான் கன்று போடும். அதன் பிறகு பால் கொடுக்கும். ஆனால் ராஜகோட்டையின் 15 மாத கன்றுக்குட்டி ஈனுவதற்கு முன்பே பால் கொடுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘பருவத்துக்கு வரும் ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாதது, கர்ப்பப்பை சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பது, உணவுமுறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கலாம். அதனால் மாட்டை பரிசோதித்த பிறகுதான் கூற முடியும். பருவத்துக்கு வராத மாடுகளில் இருந்து கறக்கப்படும் பாலை குடிப்பது நல்லதல்ல‘‘ என்றார்.

No comments

Powered by Blogger.