Header Ads



பாகிஸ்தானில் 4 இந்து டாக்டர்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் 4 இந்து டாக்டர்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் சிறுபான்மை சமூகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சிகார்பூர் பகுதிக்கு அருகே சாக் நகரில்  இந்த சம்பவம் நடந்துள்ளது.

டாக்டர்கள் அசோக், நரேஷ், அஜீத மற்றும் சாடியா ஆகியோர் தங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை பாகிஸ்தான் இந்து கவுன்சிலின் தலைமை புரவலரும், மாகாண பேரவையின் முன்னாள் உறுப்பினருமான டாக்டர் ரமேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.

சாக் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் வசிக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் நடப்பது மோசமானது. அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சிறுபான்மையினருக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என ரமேஷ் கேட்டுக் கொண்டார்.,இதனிடையே டாக்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரைக் கைது செய்துள்ளதாகவும், இதர குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.