Header Ads



இலங்கையில் இலத்திரனியல் வாக்களிப்பு முறை..?

தேர்தலில் வாக்கு சீட்டு முறைமைக்குப் பதிலாக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆலோசித்து வருகிறார். அதன் பொருட்டு நாடு முழுவதிலும் உள்ள தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளார்.
 
இந்தியாவில் நடைமுறையிலுள்ள இலத்திரனியல் வாக்கு இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பு இயந்திரம் ஒன்றை உருவாக்குவதற்கு உத்தேசித்துள்ளதுடன் இலத்திரனியல் இயந்திரம் மூலம் வாக்களிக்கவும், அந்த இயந்திரத்தில் இருந்து வெளியிடப்படும் வாக்களித்தமைக்கான சீட்டை வேறு ஒரு பெட்டியில் இட்டு பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப் புதிய முறை குறித்து, அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ள தேர்தல் ஆணையாளர் திட்டமிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.