முல்லா உமரின் கட்டளையை மீறி தாக்குதல் - ஹஜ்பெருநாளில் 7 முஸ்லிம்கள் வபாத்
ஆப்கானிஸ்தானில் ஹஜ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாகியான் என்ற இடத்தில் மசூதியில் தொழுகை முடிந்து ஏராளமானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது, மக்கள் கூட்டத்தில் புகுந்த தற்கொலை படைவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான். அதில் 7 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த தகவலை உள்துறை மந்திரியின் செய்தி தொடர்பாளர் செதிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டது தெரியவந்தது. பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என தலிபான் தலைவர் முல்லா உமர் தெரிவித்து இருந்தார். அதையும் மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Post a Comment