சாத்தானுக்கு கல் எறிதல் - அல்ஹம்துலில்லாஹ் இம்முறை மனித மரணங்கள் இல்லை
![]() |
| சாத்தான் மீது கல் எறிவதற்காக மக்காவில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள். |
ஹஜ் யாத்திரையின் நிறைவு கட்டமான சாத்தானின் மீது கல்லெறியும் சடங்கில் பங்கேற்க மெக்கா நகரில் உள்ள மினாவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். அங்குள்ள 25 மீட்டர் உயரமுள்ள 3 தூண்கள் மீது ஒவ்வொரு யாத்ரிகரும் 21 கற்களை எறிய வேண்டும் என்பது முறையாகும். இந்த சடங்கு முடிந்தவுடன் பக்தர்கள், விலங்குகளை இறைவனுக்கு அர்ப்பணிப்பர். இதற்காக அராஃபத் நகரில் வழிபாட்டை முடித்துக் கொண்டு லட்சக்கணக்கானோர் மெக்கா நோக்கி வந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பான பயணத்துக்கு முதல் முறையாக சவ்தி அரசு மெட்ரோ திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. சீன நிறுவனம் அமைத்துள்ள இந்த மெட்ரோ ஒரு மணி நேரத்தில் 72 ஆயிரம் பேரை மெக்காவுக்கு அழைத்துச் செல்லும். இதன் மூலம் கூட்ட நெரிசலை சுலபமாக கையாள முடியும்.
கடந்த ஆண்டுகளில் நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2006ல் 251 பேரும், 2006ல் 364 பேரும், 1990ம் ஆண்டு 1426 பேரும் நெரிசல் காரணமாக உயிரிழந்துள்ளனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடியே சிறப்பாக நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் மன்சுர் அல் துர்கி தெரிவித்தார். முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்றாக ஹஜ் யாத்திரை கருதப்படுகிறது. ஆரோக்கியமுள்ள முஸ்லிம் ஒருவர் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment