Header Ads



நாணயக் குற்றித் தொலைபேசிகளுக்கு மதிப்பு குறைகிறது

 நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் பாவனை குடாநாட்டில் அதீத வளர்ச்சி பெற்றதை அடுத்துப் பிரதான வீதிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த நாணயக் குற்றித் தொலைபேசிகளின் பக்கம் பாவனையாளர்கள் திரும்பியும் பார்க்காத நிலைமை யாழ்ப்பாணத்தில் வந்துவிட்டது.

ஒரு காலத்தில் பாவனையாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய நாணயக் குற்றித் தொலைபேசிகள் அனைத் தும் இப்போது கவனிப்பாரின் றித் தொங்கிக் கொண்டிருக் கின்றன. அவற்றில் எவரும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. அந்தளவுக்குக் குடாநாட்டில் தொடர்பாடல் வசதி வளர்ந்து விட்டது என்றால் நினைத்துப் பாருங்கள்.

இதனால் வருமானம் இன்றி பொது இடங்களில் ஓய்ந்து கிடக்கும் நாணயக் குற்றித் தொலைபேசிகளைக் கழற்றி எடுக்கும் பணியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகம் ஈடுபட்டுள்ளது.மக்களின் வீடுகளில் இப் போது கேபிள் தொலைபேசிகள், சி.டி.எம்.ஏ தொலைபேசிகள், கைத்தொலைபேசிகள் என வகை வகையான வசதிகள் வந்து விட்டமையால் நாணயக் குற்றித் தொலைபேசிகள் பயன்பாட்டை இழந்துவிட்டன. இதனால் இவற்றைக் கழற்றி எடுக்கத் தீர்மானித்துள்ளதாக ரெலிக்கொம் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாணயக்குற்றித் தொலைபேசி கள் தான் குடாநாட்டில் மக் களின் மிக முக்கிய தொலைத் தொடர்புச் சாதனங்கள் பொது இடங்களில் பொருத்தப்பட் டுள்ள அவற்றைப் பயன்படுத்து வதற்கு மக்கள் மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த வரலாறுகளும் உள் ளன. அப்போது அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கு சங்கக் கடைகளில் கூட்டம் நின்றது போல இந்த நாணயக் குற்றித்தொலைபேசிகளுக்கும் அப்போது அதிக மவுசு. அப்போது வீடுகளுக்கான தொலைபேசிகளைப் பெறுவதற்குப் பல கட்டுப்பாடுகளும் இருந்தன.

இந்த நிலையால் நாணயக் குற்றித் தொலைபேசிகளின் பாவனை உச்சக் கட்டமாக இருந்ததால் ஸ்ரீலங்கா ரெலிக் கொம் நிறுவனத்துக்கும் நல்ல வருமானம் கொட்டியது. இதனையடுத்து அவற்றின் எண்ணிக் கையை அதிகரித்திருந்தது ரெலிக்கொம்.தற்போது தொடர்பாடல் வளர்ச்சி காரணமாக நாணயக் குற்றித் தொலைபேசிகளின் பாவனை குறைவடைந்ததையடுத்து அவற்றைக் கழற்றும் பணியில் ரெலிக்கொம் ஈடுபட்டுள்ளது. 

யாழ்.பஸ்நிலையம், யாழ்.போதனா வைத்திய சாலை, யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி ஆகியவற்றிலேயே இந்த நாணயக்குற்றித் தொலை பேசிகள் இப்போது உள்ளன. அவற்றில் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள தொலைபேசி மட்டுமே மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய இரண்டும் பாவனையற்று உள் ளன என ரெலிக்கொம் வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனைய இடங்களில் இருந்த நாணயக் குற்றித் தொலைபேசிகள் கழற்றி அகற்றப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.