கடாபியின் ஜனாஸாவை தாருங்கள் - குடும்பத்தினர் கோரிக்கை
வல்லரசு நாடுகளின் ஆதரவுபெற்ற லிபிய கிளர்ச்சியாளர்களுடன் நடைபெற்ற மோதலில் வபாத்தான லிபியத் தலைவர் கடாபியின் ஜனாஸாவை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவரது குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடாபியின் ஜனாஸா தற்போது குளிர்பெட்டி உதவியுடன பாதுகாக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவரது குடும்பத்தினர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போதைய இடைக்கால அரசாங்கம் கடாபியின் ஜனாஸா இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்படுமென அறிவித்துள்ள பொதிலும் இதுவரை அவ்வாறு நடைபெறவில்லை.
இந்நிலையிலேயே கடாபியின் ஜனாஸாவை தம்மிடம் ஒப்படைக்குமாறு கடாபியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேவேளை கடாபியின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யாமல் வைத்திருப்பது கடாபியின் ஆதரவாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Post a Comment