புலிகளின் செய்றபாடுகளை அடக்க புதிய 5 புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் இலங்கையில் போர் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அளவில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர். புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் இராணுவப் படையின் கீழ் ஐந்து விசேட புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட போரின் போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற புலி உறுப்பினர்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களில் சில பிரிவினரும் இணைந்து மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் படைத் தலைமையகம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment