Header Ads



உறவினருடன் காணிப் பிரச்சினை - மன்னாரில் முஸ்லிம் சகோதரர் அடித்துக் கொலை

மன்னார் வேப்பங்குளம், சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அப்துல் ரஹீம் பர்ஸின் பொல்லால் தாக்கப்பட்டு வபாத்தாகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது, காணி தொடர்பில் வாத்தானவருக்கும் அவரது உறவினருக்கும் இடையில் வாய்தர்க்கம் நடைபெற்றவேளை அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போதே வபாத்தானவரின் தலையில் அவரின் உறவினர் பொல்லால் அடித்துள்ளார்.

காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் வபாத்தாகியுள்ளார். சிலாபத்துறை பொலிஸார் அவரது ஒன்றுவிட்ட சகோதரரை கைதுசெய்துள்ளனர். குறித்த பகுதியில் அண்மையிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்திற்றகாக அனுமதிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.