Header Ads



''முத்திரைக்கும் வலியிருக்கு''

ஜெஸ்மினா மகாஸ்

(யாழ் முஸ்லிம் வலைத்தளம் வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு நடத்திய கவிதைப்போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கவிதையிது)

அகதி என்ற முத்திரைக்கு
வயது இப்போ இருபத்தியொன்று
முத்திரக்கும் வலியிருக்கு
சுமை தாங்கி கல் எங்கே..?

யாழ் மஸ்லிம் இருக்கிறம்
சொல்வதற்கு இனிக்கிறது
செல்லும் வழிதான் இன்னும்
கேள்விக் குறியாய் இருக்கிறது..!

கல்யாண வீடுகளும்
மரண வீடுகளும் தான்
எங்களுக்கு ஒன்று கூடல்
உறவுகளின் சந்தோஷ சந்திப்பு..!

பக்கத்து வீட்டாரின் மரணச்செய்தி
பள்ளி வாசல் ஒலி நாடாவில்
ஒரு நிமிடம் மௌனமானோம்
மறு நிமிடம் மறந்து விட்டோம்..!

ஏன் நாங்கள் இழந்தது உறவா..?
தொலைத்தது உணர்வா..?
விடுகதைக்கு விடையின்றி
வினயமாக கேட்கிறோம்
மீள்குடியேற்றம் என்பது பிரச்சாரமா
அல்லது அர்த்தபூர்வமானதா..??

No comments

Powered by Blogger.