''கிழட்டுத் தலை செத்துவிட்டது'' அதிர்ந்துபோன கடாபியின் மகள்
கேர்ணல் முஅம்மர் கடாபி சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிடங்களில் கடாபியின் செய்மதித் தொலைபேசிக்குத் தொடர்பை ஏற்படுத்திய கடாபியின் மகளுக்கு கடாபி கொல்லப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளமை தற்பொழுது தெரியவந்துள்ளது. இறுதிக்கட்டத்திலிருந்த போது அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் மகளான ஆய்ஷா கடாபி, தனது தந்தையை செய்மதி தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டுள்ளார். அந்த அழைப்புக்குப் கிளர்ச்சியாளர் ஒருவர் பதிலளித்துள்ளார். “கிழட்டுத் தலை செத்துவிட்டது” எனப் பதிலளித்த புரட்சியாளர் கூறியுள்ளார். இச்செய்தி கடாபியின் மகளை உலுக்கியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் கடாபிக்கு எதிரான மோதல்கள் உக்கிரமடையத் தொடங்கியதைத் தொடர்ந்து கடாபியின் மகளான ஆய்ஷா, அவருடைய தாயார் மற்றும் ரு சகோதரர்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் கோரியிருந்தனர். அல்ஜீரியாவிலிருந்தே ஆய்ஷா தனது தந்தையை செய்மதி தொலைபேசியின் ஊடாக றுதி நேரத்தில் தொடர்பு கொண்டுள்ளார்.
Post a Comment