Header Ads



சோமாலியக் கிளர்ச்சியாளர்கள் கடத்திய பிரான்ஸ் பெண் உயிரிழப்பு

சோமாலியக் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கென்யாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை பிரான்ஸ் நாட்டின்   இராஜதந்திர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் உயிரிழப்புக்கான  காரணங்கள் குறித்து எந்த வித தகவல்களும் வெளியாகவில்லை. கடந்த ஒக்டோபர் மாதம் கடத்தப்பட்ட நான்கு வெளிநாட்டவர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலியாவின் அல் ஷாபாப் கிளர்ச்சியாளர்களால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.