Header Ads



தூக்கு மரத்திற்கு இடமாற்றம்

வெலிக்கடை சிறையிலிருக்கும் மரணதண்டனைக் கைதிகளையும், அங்குள்ள தூக்கு மரத்தையும் மஹர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
சிறைச்சாலைகளை நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தி வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் நடைபெறவுள்ளது. மரண தண்டனைக் கைதிகளுடன் நீண்டகால சிறைத்தண்டனை பெற்றவர்களும் மஹர சிறைக்குமாற்றப்படுவர்.

குறுகியகாலத் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும் வட்டரெக்க சிறைக்கு அனுப்பப்படுவர். இப்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் 250 மரணதண்டனைக் கைதிகள் உள்ளனர். இவர்களைத் தடுத்து வைப்பதற்கு மஹர சிறையில் விசேட பாதுகாப்புடன் கூடிய சிறைக்கூடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

No comments

Powered by Blogger.