Header Ads



வந்துகுவிந்த கவிதைகளும் சில குறிப்புகளும்..!

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு யாழ் மஸ்லிம் வலைத்தளம் மாபெரும் கவிதைப் போட்டியொன்றை நடத்தியிருந்தது.

இக்கவிதைப் போட்டியில் சுமார் 115 கவிதைகள் எம்கரம் வந்து சேர்ந்தன. தற்போது கவிதைகள் நடுவர்களின் தேர்வில் உள்ளன. மிகவிரைவில் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் சகல ஊடகங்களிலும் பகிரங்கப்படத்தப்படும்.

கவிதைப்போட்டி பரிசளிப்பு விழாவை கொழும்பில் எதிர்வரும் 30 ஆம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபற்றிய முழுவிபரங்களும் பின்னர் விபரமாக அறிவிக்கப்படும்.

ஈராக், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து. டோஹா கட்டார் ஆகிய நாடுகளிலிருந்தும் கவிதைகள் வந்து சேர்ந்துள்ளதுடன் பல பிரபல மற்றும் மூத்த கவிஞர்களும் இக்கவிதைப் போட்டியில் பங்குகொண்டுள்ளதுடன், பல தமிழ் சகோதரர்களும் கவிதைகளை அனுப்பிவைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குறிப்பு - இந்த கவிதைப்போட்டிக்கு கவிதை அனுப்பியவர்களின் கவிதைகள் அனைத்தையும் பிரசுரம் செய்வதற்கான உரிமை யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கும், அதன் நிறுவனருக்கும் மாத்திரமே உண்டு என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

யாழ் முஸ்லிம் வலைத்தளம்

No comments

Powered by Blogger.