மௌலவி பணத்துடன் ஓடினார் - ஹஜ் செல்ல காத்திருந்த 80 பேர் பரிதவிப்பு
குருநாகல் - சியம்பலாகஸ்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் சுமார் 2 கோடி பணத்திற்கும் அதிகமான தொகையுடன் தலைமறைவாகியிருப்பதாக அறியவருகிறது.
இம்முறை ஹஜ் செல்லும் நோக்குடன் சுமார் 80 முஸ்லிம்கள் குறித்த மௌலவியிடம் 2 இலட்சம் ரூபாவிலிருந்து 3 இலட்சம் ரூபா வரையான பணத்தை செலுத்தியிருந்தனர். இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட மௌலவி குறித்த பணத்துடன் தப்பியோடியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மௌலவி அழைத்துச் செல்லும் குழுவில் செல்வதற்காக பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து விடுமுறையைப் பெற்றுக்கொண்டு சில முஸ்லிம் சகோதரர்கள் குடும்ப சகிதம் இலங்கை சென்றுள்ளனர்.
அவர்களும் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கு பிரான்ஸிலிருந்து தொடர்புகொண்ட ஒரு சகோதரர் தமது வேதனையை கொட்டித்தீர்த்தார். ஹஜ்செல்வதற்காக பணத்தை ஒப்படைத்து அந்தப் பணத்துடன் தப்பிபோடிய மௌலவியின் பெயர் விபரங்களை அவர் கூறியபோதும் ஊடக தர்மம் கருதி இங்கு அந்த மௌலவியின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment