இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை - வெள்ளை மாளிகை ஆதரவளிக்குமா..?
இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த ஐக்கிய அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஆதரவளிக்குமா என்ற பரவலான கேள்வி மேலோங்கியுள்ளது
யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களை புரிந்துள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தனது படையினர் புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சரியான விசாரணைகளை நடத்தவில்லை எனவும் அமெரிக்க அரசாங்கம் பகிரங்கமாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரி சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கைப் பிரதிநிதி ஜிம் மக்டொனால்ட் வெள்ளை மாளிகைக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டை 5 ஆயிரம் பேரின் கையொப்பங்களுடன் சமர்பித்தால் அது குறித்து பரிசீலிக்கலாம் என வெள்ளை மாளிகை அதற்குப் பதிலளித்திருந்தது. இதன்படி கையெழுத்து பெறுவதற்கு எதிர்வரும் 29ம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்படடிருந்த நிலையில் 17ம் திகதியான நேற்று 5 ஆயிரம் கையொப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment