இலங்கையில் 49 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள்
நாட்டிலுள்ள 49 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 4 வருடங்களாக எந்த விதத் தொழிலுமின்றி நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர். புத்திஜீவிகளைப் புறக்கணித்தால் நாடு பின் தங்கும் உடனடியாக அரசு பட்டதாரிகளை தொழிலுக்கு உள்வாங்கவேண்டும். இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபையின் பட்டதாரி உறுப்பினர் யோ. கோபிகாந் கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், பட்டத்தை பூர்த்திசெய்த 49ஆயிரம் பட்டதாரிகள் எதுவித வேலையுமின்றி சமூகத்தில் உலாவருகின்ற போது பாடசாலை மாணவர் மத்தியில் கற்க வேண்டும் என்ற ஆர்வம் தணிக்கப்படுகிறது. பட்டதாரிகளை தொழிலுக்கு உள்வாங்கும் போது பரீட்சை நடத்துவது நியாயமானதல்ல. கல்விக்கல்லூரிப் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் தொழில் வழங்கப்படுகிறது.
ஆனால் பட்டம் முடித்த பட்டதாரிகளுக்கு பரீட்சை வைக்கப்படுவதேன்? அவர்களது பட்டங்களைப் பூர்த்திசெய்த வருட முடிவைப் பொறுத்து பரீட்சையின்றி தொழிலை வழங்க அரசு முன்வர வேண்டும். பட்டதாரிகள் என்றால் போராட்டம் நடத்தித்தான் பதவி பெறவேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இது பட்டதாரியாகும் இளைஞர்களுக்கு பலத்த மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் விஞ்ஞான, கணித பட்டதாரிகள் 14, 500 பேருக்கு கொழும்பில் பரீட்சை நடத்தப்பட்டது. அதில் 3,000 பேர் ஆசிரியர் தொழிலுக்கு தெரிவாவர். எந்தத் தொழிலும் இன்றி குடும்பத்துக்குச் சுமையாக இருக்கும் இளைஞர், யுவதிகள் எதனையாவது பெற்றுவிடும் நோக்கில் சகல பதவிகளுக்கும் பணம் செலவழித்து விண்ணப்பித்து வருகின்றார்கள். அலைகிறார்கள்.
இன்னும் குடும்பத்தில் தங்கியிருக்க வேண்டியநிலை பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சில பட்டதாரிகள் குடும்பக் கஷ்டத்தைத் தாங்க முடியாது மேசன், தச்சுத்தொழில் வேலை செய்து வருகின்றனர். இந்தியாவின் நிலைமை இலங்கைக்கும் வந்துவிட்டது என்றார்.

Post a Comment