Header Ads



இத்தாலிக்கு வருடாந்தம் 3.500 இலங்கையர் - இருநாட்டுக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

2013ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் இத்தாலிக்கு தலா 3500 பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்பேணல் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இத்தாலி தொழில் அமைச்சர் மசுரிசியோ சாக்கோனிக்கும் அமைச்சர் டிலான் பெரேராவுக்கும் இடையில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி வீட்டுப் பணியாளர்கள், சாரதிகள் உள்ளிட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.  அடுத்த வருட மத்தியில் இருந்து இத்தாலி மொழி பயிற்சி பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான தகவல்களை எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது சுமார் 75,000 இலங்கையர்கள் இத்தாலியில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.