Header Ads



முடிவுக்கு வந்த கடாபி சகாப்தம்..! லிபியாவின் எதிர்காலம் என்ன..?

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.

(இக்கட்டுரை 23-10-2011 இன்றைய ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையை இங்கு மீள் பதிவிடுகிறோம்)

இந்த வருடத்தில் உலகம் அதிகம் உச்சரித்த பெயர்களில் நிச்சயம் அந்த மனிதரின் பெயரும் இடம்பெற்றிருக்கும். அவர்தான் கடாபி.

        கடாபியின் பெயர் எவ்வாறு இந்த உலகில் அதிகளமளிவில் உச்சரிக்கப்பட்டதோ அதேயளவு கடாபி தனது மரணத்தின் இறுதி வினாடிகளில் உச்சரித்த ஒரு கேள்வியும் உலகின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

        கடாபியின் உயிர் பிரியும் அந்த கணத்தில் கடாபி கேட்ட கேள்விதான், ''நான் உங்களுக்கு என்ன செய்தேன்'' கடாபியின் இந்த கேள்வி குறித்து நிச்சயம் லிபியர்கள் சிந்திக்கும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்பது யதார்த்தமாக நீடிக்கப்போகும் நிலையில் கடாபியின் பிந்திய நாட்கள் குறித்தும், அவர் எவ்வாறு மரணமெய்தினார் மற்றும் லிபியாவின் எதிர்காலம் குறித்தும் சுருக்கமாக ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

        அரபுநாடுகளை ஆட்டிப்படைத்த புரட்சி லிபியாவுக்கு பரவியதில் வியப்பேதும் இல்லைதான். இவ்வாண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி கடாபயை பதவி விலகுமாறு கோரி அந்hட்டு மக்கர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதன்போது பெங்காசி நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது லிபிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 84 பேர் மரணமடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பல போராட்டங்கள் நடைபெற்றன. இதன்போதும் ; பலநூறு பேர் மரணமடைந்தனர்.

        இதனால் கடாபிற்கெதிரான உணர்வு லிபியர்களிடையே பரவலாக மேலோங்கியது. தனத சொந்த நாட்டு மக்களையே கடாபி கொலைசெய்வதாக ஊடகங்களும், மேற்குநாடுகளும் குற்றம் சுமத்தின. இதனால் கடாபியினதும், அவரது புதல்வர்களினதும் சொத்துக்கள் உலகெங்கம் முடக்கப்பட்டன. லிபியா மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.

        கடாபியை தண்டிக்கும் நோக்குடனும், அவரை தனிமைப்படுத்தும் நோக்குடனும் ஐக்கிய நாடுகள் சபையும் சில தீர்மானங்களை அதிரடியாக மேற்கொண்டது. இருந்தபோதும் இது தமது உள்நாட்டு விவகாரமென அறிவித்த கடாபி வெளிநாடுகள் தம்மீது தலையீடுகள் மேற்கொள்ளுமாயின் இரத்த ஆறு ஓடுமென எச்சரித்தார்.

        எனினும் கடாபியின் எச்சரிக்கையை மேற்குநாடுகள் அலட்சியப்படுத்தின. அமெரிக்கா தனது 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்களை லிபியாவை அண்டியுள்ள கடற்பரப்புக்கு அனுப்பியது. இதையடுத்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக தனக்கு விசுவாசமான சிலரை கடாபி மேற்குநாடுகளுக்கு தூதனுப்பினார். ஆனாலும் கடாபியின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவோ அல்லது அதுதொடர்பில் ஆர்வம் செலுத்தவோ மேற்குநாடுகள் முயலவில்லை.

        இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மார்ச் 18 ஆம் திகதி கடாபி படைகள் தமது சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்வதாக தெரிவித்து  பிரான்ஸ் நாட்டுப் படைகள் லிபிய படையினர் மீது விமானத் தாக்குதலை  மேற்கொண்டன.

        இதையடுத்து லிபியாவில் இடைக்கால அரசை உருவாக்குவதாக கடாபியின் மஹ்மூத் ஜிப்ரீல் பிரகடனம் செய்தார். இவர் இஸ்லாமிய பண்புகளை தவறாது கடைப்பிடிப்பவர் என்பவரென்ற படியால் இவர் தொடர்பில் மேற்குநாடுகள் சந்தேகம் கொண்டன. தம்மால் தனித்து கடாபி படைகளை எதிர்கொள்ள முடியாது என்பதை அறிந்த அவர் மேற்குநாடகளின் உதவியை நாடினார். மேற்குநாடுகளும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தன.

        இதன் அடையானமாக இந்த இடைக்கால அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவித்தது. ஏனைய நாடுகளின் இணக்கப்பாட்டை பெறுவதற்காக பிரான்ஸ் அதிபர் நிக்கலஸ் சர்கோஸி அயராது பாடுபட்டார். இதில் பிரிட்டன் பிரதமர் டேவின் கெமரூன் சர்கோஸியின் உற்ற தோழன் ஆனார்.

        இவற்றை அறிந்துவைத்திராத கடாபியும் அவரது புதல்வர்களும் எளிதாக கையாண்டு கிளர்ச்சியை அடக்கிவிடலாமென ஆரம்பததில் நினைத்தனர். அதனால்தான் அவர்கள் கிளர்ச்சிக்கு எதிராக தமது முழுபடைப்பலத்தையும் பிரயோகிக்க தயாராயிருக்கவில்லை.


        அப்போதுதான் டுனீசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டிருந்தது. பென் அலி தப்பியோடியது போன்றும் ஹொஸ்னி முபாராக் பின்வாங்கியது போன்றும் தனக்கு ஏற்படாது என்பதும் கடாபியின் நம்பிக்கையாக இருந்தது. ஆனாலும் நிலைமை தலைகீழானது. ஆஜ்தாபி, பஙகாஸி என பல முக்கிய நகரங்கள் கிளர்ச்சி படைகளிடம் வீழ்ந்தன.

        கடாபி தனது இளைய மகள் அல் அரப்பையும் பறிகொடுக்க நேர்ந்தது. தாக்குதல்களும் தீவிரமடையவே அரச தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி கிளர்ச்சியாளர்களுடன் சமரசத்திற்கு தயார். ஆனால் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றார்.

        அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா அகிய வல்லரசு நாடுகளினதும், நேட்டோவின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு மத்தியிலும் ஜுன் மாதம் 9 ஆம் திகதி தோன்றிய கடாபி சாகும்வரை போராடப்பேவதாக அறிவித்தார். அதன்படியே அவரது படைகளும் வீரத்துடன் போரிட்டன. இருப்பினும் தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் பலவற்றை கடாபி இழந்துகொண்டே வரநேர்ந்தது.

        ஜுன் 27 ஆம் திகதி குறிப்பிடத்தக்க அறிவிப்பொன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விடுத்தது. அதாவது மனித இனததிற்கு எதிரான படுகொலைகளை கடாபி மேற்கொண்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட வேண்டுமென அது உத்தரவு பிறப்பித்தது.

        இவற்றுக்கு எதற்கும் சளைக்காத கடாபி தொடர்ந்து மேற்குநாடுகளின் பலத்த குண்டு வீச்சுக்கு மத்தியிலும் தனது படைகளை வழிநடத்தி போராடினார். கடாபியை வீழத்துவது ஒருகட்டத்தில் சந்தேகத்திற்குரியதாகவே மாறவே இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் கடாபி பதவி விலகினாலும் அவர் லிபியாவிலேயே வசிக்கலாமென அறிவித்தார்.
       
        போரின் ஒருகட்டத்தில் கடாபியின் கை மேலோங்குவது போலவும் தென்பட்டது. கிளர்ச்சிப் படைகள் கைப்ற்றிய சில பிரதேசங்களை கடாபியின் ஆதரவுப்படையினர் மீண்டும் கைப்பற்றியமையை இதற்கு உதாரணமாக கூறலாம். இதன்போது கடாபி மீண்டுவாரோ என் அஞ்சிய பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு பெருந்தொகை ஆயுதங்களை தொடர்ந்து வழங்கின.

        இதனால் கிளாச்சிப்படைகள் மீண்டும் வேமாக முன்னேறின. இராணுவ ஆய்வாளர்களின் தகவலின்படி மகி நவீன ஆயதங்கள் இந்தப்போரின் போது பாவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவை பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமானவையென்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

        இந்த நவீன ஆயுதங்கள் உதவியோடு ஆகஸ்ட் 21 ஆம் திகதி திரிபோலியின் முக்கிய பகுதிகளை கிளர்ச்சிப்படைகள் மீட்டெடுத்தன. இதனால் கடாபி நெடுதூரம் பின்வாங்க நேர்ந்தது. இடையிடையே கடாபியின் மனைவி, மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் அயல் நாடுகளுக்கு தப்பிச்சென்றனர்.

        தொடர்ந்து முன்னெறி கிளர்ச்சிப்படைகள் கடாபியின் பிறந்த இடமான சிர்ட் பகுதியை நெருங்கின. அங்கு கடாபிக்கு அதிகளவு ஆதரவு காணப்பட்டமையால் நேட்டோ மற்றும் கிளர்ச்சிப் படைகள் நினைத்தது போன்று அவர்களால் முன்னேற முடியவில்லை. இதனால் கிளர்ச்சிப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை சிர்ட் நகரம் மீது மேற்கொண்டன.

        கடாபியும் இறுதிவரை போராடினார். தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அயல் நாடுகளுக்கு தப்பிச் செல்லவோ அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று சுகபோக வாழ்க்கை வாழ்வதையோ அவர் விரும்பியிருக்கவில்லை. இறுதிநேரத்திலும் தென்னாபிரிக்கா நைகர் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அவருக்கு அழைப்புக்கள் வந்துள்ளன. இருந்தபோதும் அவற்றை நிராகரித்துள்ள கடாபி தனது உயிருள்ளவரை லிபியாiவிட்டு அகலமாட்டேன் என்ற நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

        இந்தநேரத்தில்தான் கடாபி வசமிருந்த இறுதி நகரான சிர்ட் பன்னாட்டுப் படைகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. கடாபி தப்பித்துச் சென்றிருக்க மாட்டாரென்ற நம்பிக்கை கிளர்ச்சியாளர்களிடம் காணப்பட்டுள்ளது. தப்பித்துச் செல்லும் ஒரு கோழையாக கடாபி விளங்கமாட்டாரென்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

        இதனால் கிளர்ச்சியாளாகள் சிர்ட் நகரில் முழு அளவில் கடாபயை சல்லடைப்போட்டு தேடினர். 19 மற்றம் 20 ஆம் திகதிகளில் கிளர்ச்சிப்படைகள் தம்மை முழுமையாக இந்த தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தினர்.

        கடாபயை உயிருடனோ அல்லது உயிரற்றோ பிடிக்கும் கிளர்ச்சியாளர்களின் வெறியுடன் கூடிய தேடுதலுக்கு 20 ஆம் திகதி வெற்றி கிட்டியது. மதகு ஒன்றில் தனது நம்பிக்கைக்கு பததிரமானவர்களுடன் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்தார் கடாபி. சந்தேகத்தின்பேரில் அங்கு தாக்குதலை மேற்கொண்ட கிளர்ச்சிப்படையினரின் தாக்குதலில் அவர் காலில் காயமேற்பட்டுள்ளது. இதனால் எதிர்தாக்குதலுக்கு தயாரற்ற நிலையில் காணப்பட்டுள்ள கடாபயை கைது செய்வதற்கு கிளர்ச்சியாளர்களுக்கு நேரமெடுக்கவில்லை.

        கடாபி கைதுசெய்யப்பட்ட மகிழ்வில் அவர்கள் கடாபி மீது துப்பாக்கியால்  தாக்கியுள்ளனர். இரத்தம் வழிந்தோடிய நிலையில் காணப்பட்டுள்ள அவர் மீது பசித்திருக்கும் நாய்கள் எலும்புத் துண்டுக்காக பாய்வது போன்று கிளர்ச்சியாளர்களும் கடாபி மீது ஒருவரையொருவர் முந்திக்கொண்டு மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட வகையில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சிலர் கடாபியின் கன்னததில் அடித்துள்ளனர். மற்றும் சிலர் அவரை நிர்வாணமாக்கியுள்ளனர். தலைமுடியை பிடித்து இழுத்துள்ளனர்.

        இதன்போத வெறிமேலிட்ட சிலர் அவர் மீது துப்பாக்கிகளை நீட்டி சுடுவதற்கு தயாரானபோது தனது உயிர் பிரியும் அந்த இறுதித்தருவாயிலும் கடாபி கேட்ட பெமதியானது . ஷநான் உங்களுக்கு என்ன செய்தேன்| என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இருப்பினும் அதை எதையும் செவிமடுக்காத கிளர்ச்சிப் படையினர் காயமடைந்த கடாபிக்கு ஒருசொடட்டு தண்ணீரோ அல்லது மருத்துவ உதவிகளோ வழங்காது சுட்டுத்தள்ளினர்.

        லிபியாவை தனது 27 வயது தொடக்கம் சுமார் 42 ஆண்டுகள் வரை ஆண்டு, எகாதிபத்தியத்திற்கு அடிபணியாத கடாபி கடாபி தலையிலும், நெஞ்சிலும் துப்பாக்கி ரவைகளை சுமந்தவராக தனது 69 ஆவது வயதில் உயிர் துறந்தார்.

        இங்கு தாமே விமானக்குண்டு வீசி கடாபியை காயப்படுத்தியதாக நேட்டோ படையினர் அறிவித்தபோதும் அந்தநேரத்தில் நேட்டோ படையினர் எத்தகைய குண்டுத்தாக்குதலையும் மேற்கொள்ளவில்லையென சுயாதீன தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

        ஆவ்வாறுதான் டழபயை கோழையாக சித்திகரிக்கும் நோக்குடன் அவர் 5 வாகனஙகளில் தப்பச்சென்றதாக கூறப்படுவதும் பொய் என நிரூபணமாகியுள்ளது. கடாபி இறுதி நேரத்தில் வாகனங்களை பயன்படுத்தவில்லை என்ற செய்தியும் சுயாதீன ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

        இருந்தபோதும் தாம் மனிதாபிமானத்தின் காப்பாளர்கள் என்ற போலி வேடம் தரித்திருந்த மேற்குநாடுகளும், மேற்குலகு ஊடகங்களும் காயப்பட்ட கடாபியை காப்பாற்றுவதற்காக அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு சென்றதாகவும் இருந்தபோதும் அவர் இடைவழியே இறந்துவிட்டதாகவும் கதைவிட்டதுதான் மகா வேடிக்கை.

        அத்துடன் கிளர்ச்சிப்படைகள் எவ்விதத்திலும் ஒரு கட்டியமைக்கப்பட்ட படையணியாக செயற்படாமையால் படைத்தளபதிகள் அல்லது இடைக்கால அரசிடமிருந்தோ கடாபி கைது செய்யப்பட்டால் அவர் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென்ற உத்தரவுகள் எதுவும் சண்டையில் பழ்குகொண்ட படையணிக்கு வழங்கப்பட்டிருக்கவுமில்லை.

        இதனால் கடாபியை காயத்துடன் கண்ட கிளர்ச்சிப் படையினர் தாமே அங்கு தீர்மானம் மேற்கொண்டு, தாமே கடாபியை சுட்டும்கொன்றனர்.

        கடாபி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் லிபியர்களில் அநேமானவர்கள் தமது மகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. அதுபோன்றே மேற்குநாட்டு தலைவர்கள் பலரும் கடாபியின் மரணத்திற்கு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

        இருந்தபோதும் அவரது மரணம் தொடர்பில் உலகளாவிய முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சில நாடுகளில் கடாபிக்காக ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டுள்ளதுடன் பேஸ்புக், டுவிட்டர் தளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

        1950 ஆம் ஆண்டுக்கு பின் முஸ்லிம் உலகு மூவரை அதிகம் நேசித்ததாகவும், அவர்கள் மூவருமே எகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சதாம் ஹுசைன், ஒஸாமா பின் லேடன் வரிசையில் தற்போது கடாபியும் மரணத்தை தழுவியுள்ளதாகவும் முஸ்லிம் உலகிடமிருந்து பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

        இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி எம்.பி. அஸ்வர், கடாபியின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவும் கடாபி ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராடியவர் என வர்ணித்துள்ளார்.

        கடாபியிடம் சிலவருடங்கள் விமானியாக செயற்பட்ட இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செவ்வியில், கடாபியின பெருமைகள் குறித்து விளக்கிக்கூறியுள்ளார்.

        அதேநேரம் கடாபி மரணமடைந்த விதம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள்  சபையின் செயலாளர் நவநீதம் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரோடு காணப்பட்ட கடாபி மரணமடைந்தமை குறித்து தனது சந்தேகத்தையும் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் கடாபியின் மரணம் குறித்த சுயாதீன விசாரணையை கோரியுள்ளது.

        அதேநேரம் கடாபி மரணமடைந்த பின்னரும் அவரது உடல் நல்லடக்கம் குறித்து தொடர்ந்து சர்சைகள் நீடிக்கவே செய்துள்ளன. இதுவரை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை என்றபோதிலும், இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுமென அடைக்கால அரசு அறிவித்துள்ளது.

        இது எல்லாவற்றையும்விட தற்போது எழுந்துள்ள மிகப்பெரும் கேள்விதான் லிபியாவில் அடுத்தது என்ன என்ற கேள்வியாகும். லிபியாவின்  பல பிரதேசங்கள் கிளர்ச்சிப்படையினரிடம் வீழ்ந்த பின்னர் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆட்சியாளர்களின் ஆதரவுபெற்றுள்ள எரிபொருள் நிறுவனங்கள் அங்கு எரிபொருட்களை அள்ளிச்செல்லும் நடவடிக்கையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

        இந்த உதராணமானது லிபியாவை மேற்குலக நாடுகள் எவ்வாறு சூறையாடப் போகின்றன என்பதற்கு உதாரணமாகும்.

        அவ்வாறே வர்க்க பேதங்கள் மேலோங்காமல், லிபியாவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்த கடாபி தற்போது இல்லாத நிவையில் லிபியாவில் முரண்பாடுகள் தற்போதே ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள.

        வீட்டுக்கு வீடு வாசற்படி இருப்பது போன்று லிபியாவில் எல்லோர் வீடுகளிலும் ஆயதங்கள் தாராளமாகவே உள்ளன. இந்த ஆயுதங்கள் மூலம் லிபியாவின் ஸ்த்திரத்தன்மைக்கு அது சவாலாக அமைவதுடன், கோத்திரம் ரீதியான மோதலுக்கும் வழிவகுக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

        பெங்காஸி நகரத்தைச் சேர்ந்தவர்கள் தாமே புரட்சியை ஆரம்பித்தவர்கள் எனவும், எனவே தமக்கே ஆட்சியில் அதிக பஙகு வேண்டுமென்றும் போhக்கொடி தூக்கியுள்ளனர்.

        சதாம் ஹுசைன் உயிரோடு இருந்தகாலத்தைவிட தற்போதுதான் ஈராக் பாதுகாப்பற்ற தன்மையில் காணப்படுவதாக அந்நாட்டு மக்கள் உணருவது போன்று, ஒருகாலத்தில் நிச்சயம் லிபியர்களும் கடாபியின் மரணம் குறித்து இதே நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தபோதும் அப்போது லிபியா சிதறுபட்டிருக்கும் என்பது மட்டும் உண்மை.

        கடாபி தனது 42 வருட வருட ஆட்சிக்காலத்தில் தனது நாட்டை நேசித்தார். நாட்டுக்காகவே தற்போது தனது உயிரையும் துறந்துள்ளார்.

        பன்னாட்டுப் படைகளின் தீவிர தாக்குதலுக்கு மத்தியிலும் இவ்வருடத்தில் ஜுன் மாதம் 9 ஆம் திகதி தொலைககாட்சியில் தோன்றிய கடாபி, உயிருள்ளவரை லிபியாவுக்காகவும், லிபியர்களுக்காகவும் போராடுவேன் என்று அறிவித்திருந்தார். அவரின் ஆசைப்படியே அவர் தனது இறுதிச்சொட்டு உயிருள்ளவரை போராடி மரணம் சுவைத்துள்ளார் எனலாம்..!   

No comments

Powered by Blogger.