சவர்க்காரம் போட்டு கைகழுவாமையால் 2 மில்லியன் சிறுவர்கள் மரணம்
சவர்க்காரம் இட்டு கை கழுவாமல் உணவுப் பொருட்களை உண்பதால் வாந்திபேதி, நியூமோனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவ்விரு நோய்களினாலும் உலகில் வருடமொன்றுக்கு இரண்டு மில்லியன் சிறுவர்கள் (20 இலட்சம்) மரணமடைகின்றனரென யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அப்துல்லா கான் தெரிவித்தார்.
உலக கைகழுவல் தினத்தின் தேசிய வைபவம் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது,

இவ்வாறான கைகழுவல் தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுவதனால் இந்நிலை (45) நாற்பத்தைந்து வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கையில் தொண்ணூறாயிரம் பாடசாலை மாணவர்கள் இவ்வாறான கைகழுவல் தினவைபவங்களில் கலந்துகொள்கின்றனர். நன்கு கைகழுவி சுத்தமாக இருக்கும் பழக்கம் ஒருதினத்துக்கு மட்டுமன்றி வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அப்போதுதான் சுகதேகியாக நாம் வாழமுடியும்.
சாதி, மதம் என்ற பேதங்கள் எதுவுமின்றி நாம் கைகழுவல் செயற்பாட்டினை முன்னெடுக்கலாம். எந்த மதத் கோட்பாட்டிலும் எந்த ஒரு சமூக விழுமியங்களிலும் கைகழுவலுக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. எனவே நாம் இன்றிலிருந்து இதனைப் பின்பற்றுவோமென பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்திலிருந்து தங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்

Post a Comment