இலங்கையில் 35 சதவீதமானவர்களுக்கு எலும்பு சிதைவு நோய்
இலங்கையில் 35 சதவீதமானோர் எலும்பு சிதைவு நோயின் (Osteoporosis) அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பதாக கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் மருத்துவ பேராசிரியர் சரத் லேக்கம் வசம் தெரிவித்தார்.
மாதவிடாய் சுற்றுவட்டம் முற்றுப் பெற்ற (Menopause) ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களே இப்பிரச்சினையைப் பெரிதும் எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். எலும்பு சிதைவு நோய் காரணமாக தொடை எலும்பின் தலைப்பகுதியிலேயே பெரும்பாலும் முறிவுகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எலும்பு சிதைவு நோய் தொடர்பான சர்வதேச தினம் 20 ஆம் திகதி புதன்கிழமை உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவிருக் கின்றது. இத்தினத்தை யொட்டி சுகாதார அமைச்சின் சுகாதார கல்வி பணியகம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநா ட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“உங்களது எலும்புகள் மீது அன்பு கொள்ளுங்கள்” என்ற தொனிப் பொருளில் இம்முறை உலக எலும்பு சிதைவு நோய்கள் தினம் அனுஷ்டிக்கப்படு கின்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் லோக்கம்வசம் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், எலும்பு சிதைவு நோய்க்கு மாத விடாய் சுற்று வட்டம் முற்றுப் பெற்ற பெண்களே பெரிதும் உள்ளாகின்றனர்.
அந்தடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் நாம் ஆய்வொன்றை நடாத்தினோம். அந்த ஆய்வில் இந் நாட்டில் 44 சதவீதமான பெண்கள் இந் நோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும் என்பதை இனங் கண்டோம்.
என்றாலும் உலகலாவிய கணிப்பீட்டின்படி 3 பெண்களுக்கு ஒருவர் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளுகின்றனர். அதனடிப்படையில் தான் இலங்கையில் 35 சதவீதமானனோர் இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளோம். எலும்பு சிதைவு நோய்க்கு கல்சியம் மற்றும் விட்டமின் – டி குறைபாடு பெரிதும் பங்களிப்பு செய்கின்றது. என்றாலும் இக் குறைபாடு உள்ள அனைவருக்கும் இந்நோய் ஏற்படும் என்றில்லை. அதனால் இக்குறைபாட்டைத் தவிர்த்துன் கொள்ளுவதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.
இந்நிகழ்வின் போது இலங்கை எலும்பு சிதைவு நோயாளர் தொடர் பான சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நோய் தொடர்பான தகவல்களை www. Osteoporosis.lk என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment