Header Ads



பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கிலக் கல்வி அவசியமற்றதாம்

பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற நிபந்தனை அநீதியானது என இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்த நிபந்தனையினால் மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆங்கிலப் பாடத்தை கற்பிப்பதில் நாடு முழுவதிலும் பாடசாலைகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிராமப் புற பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கில மொழியைக் கற்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த புதிய நடைமுறையினால் ஆயிரக் கணக்கான கிராமப் புற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில மொழித் தேர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக அனுமதியை தடுப்புது அநீதியானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனை தளர்த்தப்படாவிட்டால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.