பலாலி ஆசிரியர் கலாசாலை சொந்த இடம் செல்கிறது
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை மீண்டும் பலாலியில் உள்ள சொந்தக் கட்டடத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்தகால நெருக்கடியான சூழ்நிலையில் பெரும் சிரமங்களின் மத்தியிலும் இருபத்தைந்து வருடங்களாக இந்த ஆசிரியர் கலசாலை திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலய கட்டடத்தில் இயங்கி வந்தது.
இதன் காரணமாக பல இடங்களிலும் இயங்கிவந்த கலாசாலை கல்வியலாளர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக மீண்டும் சொந்த இடத்தில் இயங்கவுள்ளது.
இதன் முதற்கட்டமாக சொந்த கட்டடத்துக்கு அண்மையாகவுள்ள வயாவிளான் பாடசாலைக்கு அருகில் இயங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment