Header Ads



இந்திய மீனவர்கள் கைது, மன்மோகன் சிங் கண்டனம்

தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பில் பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தை இலங்கைக்குத் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங்,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பு இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

No comments

Powered by Blogger.