Header Ads



பேஸ்புக் மூலம் நண்பனின் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்

தனது பழைய நண்பர் ஒருவருக்கு அபென்டிக்ஸ் நோய் இருப்பதை பேஸ்புக் மூலம் தெரிந்து கொண்ட ஒரு டாக்டர் சரியான சமயத்தில் அவரைக் காப்பாற்றியுள்ளார்.

30 வயதான ராகுல் வெலனினி என்ற டாக்டரே தனது நண்பருக்கு அபென்டிக்ஸ் இருப்பதை அவர் பேஸ்புக் மூலம் அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு உரிய நேரத்தில் அவருக்கு பதில் தகவல் அனுப்பி அவரைக் காப்பாற்றியுள்ளார்.

பீட்டர் பில் என்ற 30 வயது நபரே இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்.

இவரின் வயிற்றில் உள்ள பிரச்சினையை பேஸ்புக் மூலம் தெரிந்துகொண்ட டாக்டர் நண்பர் உடனடியாக இவரை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவசர ஆலோசனை வழங்கினார்.

அவரும் உடனே சோதித்துப் பார்த்த போது அபென்டிக்ஸ் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் உடனடியாக சத்திர சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் கூறினர்.

அத்தோடு சிகிச்சையும் செய்யப்பட்டு தற்போது அவர் தேறி வருகின்றார்.

No comments

Powered by Blogger.