Header Ads



நாட்டில் அதிகார தீவிரவாதம் இன்னும் உள்ளது - சந்திரிக்கா

நாட்டில் தீவிரவாதம் முறையடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் அதிகார தீவிரவாதம் காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி விஜயகுமாரதுங்கவின் 23ஆவது நினைவுதினம் இன்று கம்பஹா சீதுவையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

விஜயகுமாரதுங்க இன்று இருந்தால் நாட்டின் நிலை குறித்து மிகவும் கவலையடைவார். மக்கள் விடுதலை முன்னணி தீவிரவாதம் போன்று அவர் அரச தீவிரவாதத்திற்கு தள்ளப்பட்டார்.

அந்த அரச தீவிரவாதத்தை நாங்கள் இல்லாதொழித்தோம். அரச தீவிரவாதமும் விடுதலைப் புலி தீவிரவாதமும் வேறு. எனினும் இன்று அது மீண்டும் தோன்றி மக்களுக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனக்கு நன்கு ஞாபகம். விஜயகுமாரதுங்கவை சிறையில் போட்டு செய்த சித்திரவதை. அவர் சிங்கள தீவிரவாதி ஒருவரை இல்லாதொழித்தார்.

அனைத்து தீவிரவாதமும் இன்று இந்த நாட்டில் இல்லாமல் போயுள்ளது என்று கூறினாலும், சில தீவிரவாதம், அதிகார தீவிரவாதம் இன்னும் உள்ளது. என்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க.

No comments

Powered by Blogger.