Header Ads



பிரபாகரனின் தற்கொலைப் படையைவிட மஹிந்தவின் குழு திறமைவாய்ந்தது

பிரபாகரனின் தற்கொலைப் படைகளைவிட மஹிந்த ராஜபக்ஷ்வின் குழுவினர் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் குறிப்பிட்அவர் மேலும் உரையாற்றியவை பின்வருமாறு,

இரண்டு வருடங்கள் சென்றதன் பின்னர் புலிகளின் குண்டுக்குப் பதிலாக அரசின் குண்டு உள்ளது. அது தற்போது வெடிக்கவுள்ளது. அந்த குண்டு காரணமாக இந்த நாட்டு மக்கள் தினமும் மரணிப்பர்.

புலிகளின் குண்டு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை எங்காவது சந்தியில் போடப்படும். 30, 40 பேர் உயிரிழப்பர் இன்னும் சிலர் காயமடைந்து வைத்தியசாலைக்குச் செல்வர். அதோடு முடிந்தது. இது அப்படி அல்ல.
இந்த குண்டு எந்நாளும் உள்ளது. ஒவ்வொருவரும் இந்த குண்டால் பாதிக்கப்படுவர். எல்லா வீட்டிலும் இந்த குண்டு உள்ளது. அதுதான் இன்று அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த குண்டு. இது பற்றிக் கொள்வது வாழ்க்கைச் சுமை என்று நாங்கள் சொல்வோம். அந்தக் குண்டு வெடித்ததும் மரணம். பின் துண்டுகளைத் தேடிக் கொள்ள முடியாது.

இந்த குண்டு இருந்திருந்து கொல்லும். பிரபாகரனிடம் இருந்தனர் தற்கொலை புலிகள் 300 பேர். அவர்கள் இறந்து எங்களையும் கொல்வர். மஹிந்த ராஜபக்ஷ்விற்கு 145 குழுக்கள் உள்ளன. அவர்கள் புலிகளைவிட சாமர்த்தியமானவர்கள்.

எங்களை கொன்று அவர்கள் உயிர்வாழ்வர் அதுதான் நடக்கும் என்றார்  ரணில்.

No comments

Powered by Blogger.