முஸ்லிம் இளைஞர் போராட்டம், சக்தி டி.வி. அடிபணிந்தது
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சக்தி டி.வி யில் ஒளிபரப்பாகவிருந்த பொக்கிஷம் என்ற தமிழ் திரைப்படம் முஸ்லிம் வாலிபர்கள் Facebook மூலம் மேற்கொண்ட முயற்சியால் அந்த திரைப்படத்தை சக்தி டிவி ஒளிபரப்புவதில்லை என்று தீர்மானித்துள்ளது.கடந்த சில மாதங்களாக Facebook சமூக வலைத்தளத்தில் ‘இஸ்லாமிய பெருநாள் தினங்களில் பெருநாளின் பெயரை பயன்படுத்தி திரைப்படம் போடப்படுவதை எதிர்போம்’ என்ற விடய பக்கத்துக்கு ஆதரவாக 3500 வரையான ஆதரவாளர்கள் இணைந்ததுடன் அது தொடர்பான கருத்து பரிமாற்றங்களையும் நடத்திவந்தனர்.
முஸ்லிம் வாலிபர்கள் குறிப்பாக Facebook சமூக வலைத்தளம் பயன்படுத்தும் உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியால் ‘பொக்கிஷம்’ என்ற தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது.
அந்தவகையில் இவ்வாறான செயற்பாட்டில் பங்கெடுத்த முஸ்லிம் வாலிபர்களை யாழ் முஸ்லிம் வலைத்தளம் போற்றுகிறது. அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறது. பேஸ்புக் மூலம் தீமை எதிர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட முடியுமென்பது இதன்மூலம் தெளிவாகிறது.
Post a Comment