ஊருக்கு உபதேசம் செய்யும் ஒபாமா மனைவி
பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பதை தடுக்கக் கூடாது, கிண்டல் செய்யக் கூடாது, கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது, உடல் பருமனை குறைக்க வேண்டும். பருப்பு, கீரை வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும். இப்படி எந்த பிரசாரம் என்றாலும் அமெரிக்காவில் முதல் ஆளாய் கூப்பிடுவது அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெலைத்தான்.
உடல் ஆரோக்கியம் தொடர்பான, பருமன் குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றால் மறுக்காமல் ஓகே சொல்லிவிடுகிறார் மிஷெல்.
இதை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது பிக்கவர்ன்மென்ட் டாட் காம் என்ற செய்தி இணையதளம். குண்டாக இருக்கும் மிஷெல், பர்கர் ஐட்டங்களை வெளுத்துக் கொண்டிருக்க, ஒபாமா கொஞ்சமாய் காய்கறி சாலட் சாப்பிடுகிறார்.
‘‘ஓட்டல்களில் சாப்பாடு அளவையும் கொழுப்பு அளவையும் குறைக்கச் சொல்லும் பிரசாரத்தை தீவிரப்படுத்தப் போறேன். அமெரிக்காவின் உணவுப் பழக்கத்தையே மாத்தப் போறேன்’’ என்று அதில் மிஷெல் சொல்ல.. ‘‘அடுத்த தடவையும் அதிபராகலாம்னு பாக்கறேன். தேவையில்லாம மக்களை சீண்டிப் பாக்காத’’ என்று ஒபாமா கூறுவது போன்ற கார்ட்டூன். ‘மிஷெல் ஊருக்குதான் உபதேசம். அவர் குண்டாகிக் கொண்டே போகிறார்’ என்று கூடவே வாசகங்கள். எம்எம்எஸ்களில் இந்த கார்ட்டூன் அதிகளவு பரிமாறப்படுகிற தாம்

Post a Comment