லிபியாவில் போராட்டம்
லிபியாவின் கிழக்கு நகரில் போராட்டக்காரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததையடுத்து கொந்தளித்த மக்கள் கூட்டம் பொலிசாருடனும் அரச ஆதரவாளர்களுடனும் மோதியது. இதில் 14 பேர் காயமடைந்தனர்.
அதேவேளை லிபியாவின் தலைவர் கடாபிக்கு ஆதரவான போராட்டங்களும் வேறாக நடைபெற்றன. பொலிசார் கைது செய்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு கோரி அரச அலுவலகமொன்றின் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் கூட்டம் பின்னர் சாகா சதுக் கத்திற்குச் சென்றது. அங்கு அவர்களுக்கும் பொலிசார் மற்றும் அரச ஆதரவாளர்க ளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போதும் பின்னர் கலவரம் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டது. 10 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
லிபியாவின் இரண்டாவது பெரிய நகரிலே திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை வெளியேறுமாறு போராடி வருகின்றனர். எகிப்தைத் தொடர்ந்து அரபு நாடுகளுக்குப் பரவிய மக்கள் போராட்டப் போக்கு தற்போது வட ஆபிரிக்காவுக்கும் பரவியுள்ளதற்கான சமிக்ஞையாகவே இது தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியாவின் பிரதம மந்திரி பக்தாதி அல் – மஹ்மூதியின் பதவி விலகலைக் கோரி துறைமுக நகரான பெங்காஸியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். எனினும் கடந்த 40 வருடங்களுக்கும் அதிகமான காலம் ஆட்சி நடத்திவரும் தலைவர் கடாபி மீது நேரடியாகத் தமது கோபத்தை எவரும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை கடாபிக்கு ஆதரவான நாடு தழுவிய போராட்டங்கள் நடை பெறுவதாக லிபியாவின் அரச தொலைக் காட்சி செய்தி வெளியிட்டது.
பெங்காஸி நகரிலே ஆர்ப்பாட்டம் செய்துவரும் மக்கள் பெட்ரோல் குண் டுகளையும் கற்களையும் வைத்திருந்ததாக லிபியாவின் தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

Post a Comment