கிரிக்கெட் வீரர்களுக்கு டுவிட்டர் பார்க்க தடை
உலகக் கிண்ண போட்டியின் போது வீரர்கள் மற்றும் அணிகளின் அதிகாரிகள் டுவிட்டர் இணையத்தில் தங்களது கருத்துகளை எழுத சர்வதேச கிரக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) தடைவிதிதுள்ளது. உலகக் கிண்ண போட்டிகளின் போது சூதாட்டத்தைத் தடுப்பதற்காகவே ஐ. சி. சி. ஊழல் தடுப்பு பிரிவு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி முகாமையாளர் ஸ்டீவ் பெர்னாட் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கருத்துகளின் மூலம் கடந்த 6 மாதங்களில் 1,100க்கும் மேற்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதையடுத்து ஐ. சி. சி. இந்த தடையை விதித்துள்ளது என சிட்னி மோர்னிங் ஹெராட் செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment